சத்தீஷ்காரில் 28 நக்சலைட்டுகள் சரண்

கோப்புப்படம்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தநிலையில், அண்மைகாலமாக ஆயுதங்களை கைவிட்டு தங்களுக்கான அரசின் மறுவாழ்வு நடவடிக்கைகளை ஏற்று நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று அந்த மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட போலீசில் 28 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். அவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 22 பேரின் தலைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.89 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






