திருச்சி ஐ.ஐ.ஐடியில் வழங்கப்படும் பட்ட மேற்படிப்புகள் என்னென்ன? முழு விவரம்

உலக அளவிலும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பப் படிப்பினை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் திருச்சியில் அமைந்துள்ள "இந்திய இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி" (INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, TRICHY) என்னும் அமைப்பாகும்.
இந்தியாவில் பல இடங்களில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. மொத்தம் 21 இந்திய் "இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி" (IIIT) நிறுவனங்களில் திருச்சியிலுள்ள இந்தக் கல்வி நிறுவனம் மிக முக்கிய கல்வி நிறுவனமாக தமிழகத்தில் கருதப்படுகிறது.
மத்திய அரசின் 50 சதவித பங்களிப்பும் தமிழக அரசின் 35 சதவித பங்களிப்பும், தொழில்துறை பங்காளர்களின் 15 சதவித பங்களிப்பும் இணைந்து எந்தவித இலாப நோக்கமும் இல்லாமல் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நிறுவனத்தை "PPP மாடல்" என்று அழைப்பார்கள். அதாவது, Public – Private – Partnership (PPP) Model என்பதே அதன் பொருளாகும்.
தொழில் நிறுவன பங்குதாரர்களாக "டிசிஎஸ்" என அழைக்கப்படும் "டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்" (Tata Consultancy Services), காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூக்ஷன்ஸ் (Cognizant Technology Solutions), இன்போசிஸ் ராம்கோ சிஸ்டம்ஸ் (Infosys Ramco Systems), மற்றும் எல்காட் நவிடாஸ் (ELCOT Navitas) ஆகிய நிறுவனங்கள் இந்த கல்வி நிறுவனத்திற்கு உதவிகரமாக அமைந்துள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் சேதுராப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இந்தக் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பட்டப்படிப்புகள்
இந்தக் கல்வி நிறுவனத்தில் கீழ்கண்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
•பி டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங். (COMPUTER SCIENCE AND ENGINEERING )(BACHELOR OF TECHNOLOGY) -
இது 4 வருட படிப்பாகும்.
•பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ்) COMPUTER SCIENCE AND ENGINEERING (ARTIFICIAL INTELLIGENCE AND DATA SCIENCE ) ( BACHELOR OF TECHNOLOGY)இது 4வருட படிப்பாகும்.
• பி .டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங். ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING (BACHELOR OF TECHNOLOGY) இது 4 வருட படிப்பாகும்.
•பி டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (வி. எல் எஸ். ஐ. டிசைன்) ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING (VLSI DESIGN) (BACHELOR OF TECHNOLOGY)இந்த படிப்பு 4வருட படிப்பாக நடத்தப்படுகிறது.
கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பட்டமேற்படிப்புகள்
இங்கு நடத்தப்படும் பட்ட மேற்படிப்பில் கீழ்க்கண்ட தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்படுகின்றன.
•எம் டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்.( M. TECH. COMPUTER SCIENCE AND ENGINEERING) (MASTER OF TECHNOLOGY)இது இரண்டு வருட படிப்பாகும்.
•எம் டெக் வி எல் எஸ் ஐ சிஸ்டம்ஸ். (M.TECH. VLSI SYSTEMS) (MASTER OF TECHNOLOGY) இது இரண்டு வருட படிப்பாகும்.
டாக்டர் பட்ட படிப்புகள் (Ph.D)
இந்த கல்வி நிறுவனத்தில் டாக்டர் பட்ட(Ph.D) படிப்புகளாக-
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (COMPUTER SCIENCE AND ENGINEERING)
•DATA ANALYTICS,
•MACHINE LEARNING,
•DEEP LEARNING,
•IOT,
•CLOUD COMPUTING,
•MEDICAL IMAGE PROCESSING,
•HARDWARE SECURITY,
•NFORMATION SECURITY,
•DATA SCIENCE,
•REMOTE SENSING & GEOGRAPHIC INFORMATION SYSTEM(GIS),
•DIGITAL AGRICULTURE,
•FEDERATED LEARNING,
•FULL STACK DEVELOPMENT.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங். (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING)
•VLSI DESIGN,
•WIRELESS COMMUNICATION,
•MICRO & NANO ELECTRONICS,
•COMPACT MODELING & SIMULATION
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (MECHANICAL ENGINEERING)
•ADDITIVE MANUFACTURING,
•POWDER METALLURGY,
•SMART MATERIALS,
•ENERGY STORAGE MATERIALS
சயின்ஸ் அண்ட் ஹியுமானிடீஸ் (SCIENCE AND HUMANITIES)
PHYSICS
•OPTOELECTRONIC MATERIALS,
•FIBER OPTICS,
•PLASMONICS
MATHEMATICS
•FLUID DYNAMICS
ECONOMICS
•HEALTH ECONOMICS,
•GLOBAL ISSUES IN HEALTH
ENGLISH
•APPLIED LINGUISTICS,
•INDIAN WRITING IN ENGLISH
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி…
இந்த படிப்புகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY TIRUCHIRAPPALLI,
SETHURAPATTI,
TRICHY-MADURAI HIGHWAY,
TAMIL NADU – 620012
WEBSITE : www.iiits.ac.in
EMAIL: office@iiitt.ac.in
OFFICE NO: 94420 45851.
