கேட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்னென்ன...?


கேட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்னென்ன...?
x

உயர்தர கல்வி நிலையங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது.

கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (கேட் )

(GRADUATE APTITUDE TEST IN ENGINEERING) (GATE).

“கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்” என்னும் தேர்வு புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் (INDIAN INSTITUTE OF SCIENCE)மற்றும் ஐ.ஐ.டி என அழைக்கப்படும் "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி"( INDIAN INSTITUTE OF TECHNOLOGY)ஆகிய நிறுவனங்களால் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு( COMPUTER BASED TEST)ஆகும். எம் .டெக் (M.Tec), எம்.இ (M.E),எம். எஸ் (M.S), பி.எச்டி (Ph.D),ஆகிய படிப்புகளை படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும்.

குறிப்பாக_ "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி"( INDIAN INSTITUTE OF TECHNOLOGY) "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ்"(INDIAN INSTITUTE OF SCIENCE), "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி"(NATIONAL INSTITUTE OF TECHNOLOGY), "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி"(NATIONAL INSTITUTE OF INFORMATION TECHNOLOGY) மற்றும் உயர்தர கல்வி நிலையங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்:-

இந்த கேட் ( GATE) தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக_

· AIRPORTS AUTHORITY OF INDIA (AAI),

· BHARAT HEAVY ELECTRICALS LIMITED (BHEL),

· BHARAT SANCHAR NIGAM LIMITED (BSNL),

· COAL INDIA LIMITED (CIL),

· CENTRE FOR RAILWAY INFORMATION SYSTEMS (CRIS),

· CHENAB VALLEY POWER PROJECTS LIMITED (CVPPL),

· DAMODAR VALLEY CORPORATION (DVC),

· ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED (ECIL),

· ENGINEERS INDIA LIMITED (EIL),

· GAIL (INDIA) LIMITED,

· GRID INDIA,

· INDIAN OIL CORPORATION LIMITED (IOCL),

· MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED (MDSL),

· NATIONAL ALUMINIUM COMPANY LIMITED (NALCO),

· NATIONAL CAPITAL REGION TRANSPORT CORPORATION (NCRTC),

· NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA (NHAI),

· NATIONAL MINERAL DEVELOPMENT CORPORATION (NMDC),

· NEYVELI LIGNITE CORPORATION INDIA LIMITED (NLCIL),

· NORTH EASTERN ELECTRIC POWER CORPORATION LIMITED (NEEPCO),

· NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED (NPCIL),

· NATIONAL THERMAL POWER CORPORATION (NTPC),

· ODISHA POWER TRANSMISSION CORPORATION LIMITED (OPTCL),

· OIL AND NATURAL GAS CORPORATION (ONGC),

· POWER GRID CORPORATION OF INDIA LIMITED

· (POWERGRID), POWER SYSTEM OPERATION CORPORATION LIMITED (POSOCO),

· PUNJAB STATE POWER CORPORATION LIMITED (PSPCL),

· RASHTRIYA ISPAT NIGAM LIMITED (RINL),

· STEEL AUTHORITY OF INDIA LIMITED (SAIL),

ஆகிய நிறுவனங்கள் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றன. அரசு நிறுவனங்களில் இந்த வேலை வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்படுகிறது. மேலும் சி.எஸ்.ஐ.ஆர் (CSIR),டி .ஆர். டி .ஓ.(DRDO), ஐ. எஸ் .ஆர். ஓ (ISRO ) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் பெல்லோஷிப்(FELLOWSHIP) எனப்படும் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையும் பெறுவதற்கு இந்த தேர்வு பக்க பலமாக அமைகிறது. வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்த கேட்(GATE ) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.

கேட் தேர்வு:-

இந்த கேட் ( GATE) தேர்வு பொதுவாக மூன்று மணி நேரம் நடைபெறும். இந்தத் தேர்வில் பொறியியல் தொழில்நுட்பம் கட்டடக்கலை மற்றும் சில குறிப்பிட்ட அறிவியல் பிரிவுகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டில் இந்த தேர்வு எழுதலாம்.

தேர்வு விபரம்:-

தேர்வுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் மூன்று வகையான கேள்விகள் கேட்கப்படும். அவை,

1. கொள் குறி வகை வினாக்கள் (MULTIPLE CHOICE QUESTIONS((MCQ)

2. தேர்ந்தெடுக்கப்பட்ட கொள் குறி வினாக்கள்(MULTIPLE SELECT QUESTIONS)(MSQ)

3. எண் வகை அமைப்பிலான கேள்விகள்.(NUMERICAL ANSWER TYPE)(NAT)-ஆகும்.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள்:-

இதே தேர்வில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை பின்வருமாறு:-

1. ஜெனரல் ஆப்டிடியூட் (GENERAL APTITUDE)

2. இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸ் (ENGINEERING MATHEMATICS)

3. முக்கிய பாடம் ( CORE SUBJECT)---ஆகும்.

ஜெனரல் ஆட்டிட்யூட் பாடப்பிரிவில் மொத்தம் 10 கேள்விகள் இடம் பெறும். ஐந்து கேள்விகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகும். மீதமுள்ள ஐந்து கேள்விகள் இரண்டு மதிப்பெண்களுக்கான கேள்விகளாகும். அதாவது மொத்தம் 15 மதிப்பெண்களுக்கு இந்த பகுதியில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸ் என்னும் பாடப்பிரிவில் 13 முதல் 15 மதிப்பெண்கள் வரை கேள்விகள் இடம் பெறும். இந்தப் பிரிவில் பெரும்பாலும் பொறியியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை இடம் பெறும்.

முக்கிய பாடப்பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகள் இடம் பெறும்.

கேட் நுழைவுத் தேர்வு _ முக்கிய நாட்கள்:-

2026 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இப்போதே வெளியிடப்பட்டுள்ளது இதன்படி கீழ்கண்ட நாட்கள் முக்கிய நாட்களாக கருதப்படுகிறது.

1 ஆன்லைன் மூலம் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்ப இறுதி நாள்: 28.09.2025 ஆகும்.

2. தேர்வு நடைபெறும் தேதிகள் :07.02.2026,08.02.2026, 14.02.2026 மற்றும் 15.02.2026

3. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 19.03.2026.

மேலே குறிப்பிட்டுள்ள தேதிகள் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் தன்மைகள் கொண்டவை.

தேர்வு நடைபெறும் இடங்கள்:-

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி , நாகர்கோவில், காரைக்குடி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், ஊட்டி, பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் இந்த தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டண விபரம்:-

பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 1,009 ஆகும். மற்றவர்களுக்கு ரூபாய் 2,000 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

GATE-JAM OFFICE

INDIAN INSTITUTE OF TECHNOLOGY GUWAHATI

GUWAHATI - 781039 (GUWAHATI), INDIA

PHONE +91 361 258 6500

WEBSITE : https://gate2026.iitg.ac.in/

EMAIL : helpdesk.gate@iitg.ac.in (General query)

pwd.gate2026@iitg.ac.in (PWD related query)

1 More update

Next Story