மாஸ் கம்யூனிகேஷன் படிக்க வேண்டுமா..? - விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

தகவல் தொடர்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சி பாதைக்கான அடித்தளம்.
இன்றைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சி பாதைக்கான அடித்தளம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். சிறந்த முறையில் தகவல்கள் பரிமாறப்படும் பொழுதுதான் மிகச் சிறந்த புரிதல் ஏற்பட்டு அதன்மூலம் வளர்ச்சி ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு, "தி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்" (THE INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION) என்னும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கற்பித்தல், பயிற்சிகள் வழங்குதல், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தகவல் தொடர்பின்மூலம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.
இதன்மூலம் இன்றைய மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பில் ஈடுபடும் நிர்வாகிகள் ஆகியோருக்கு உலக அளவில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு பக்க பலமாக அமைகிறது.
வளர்ந்துவரும் நாடுகளின் தேவைகளுக்குஏற்ப தகவல் தொடர்பு பரிமாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும்? என்பதை இங்கு பயிற்சிக்கு வருபவர்களுக்கு கற்றுத் தருகிறது. 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அப்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி இந்த நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
மிகச் சிறிய அளவில் ஆசிரியர்கள் மற்றும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஆலோசகர்கள் அடங்கிய பயிற்சி நிறுவனமாக அப்போது இந்த நிறுவனம் விளங்கியது. ஆரம்ப காலத்தில் மத்திய அரசு ஒளிபரப்பு துறையில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கியது. பின்னர், 1969 ஆம் ஆண்டு உலக நாடுகளில் உள்ள அனைவரும் பங்குபெறும் வகையில் "இன்டர்நேஷனல் ட்ரெய்னிங் ப்ரோக்ராம்" (INTENATIONAL TRAINING PROGRAMME) உருவாக்கப்பட்டது. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஜெனலிசம் பார் டெவலப்பிங் 5 (POST GRSDUATE DIPLOMA FOR JOURNALISM FOR DEVELOPING COUNTRIES) என்னும் படிப்பு தொடங்கப்பட்டு, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள் (POST GRADUATION DIPLOMA COURSES)
தற்போது பல்வேறு போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள் இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
அவை பற்றிய விவரம்:-
- POST GRADUATION DIPLOMA IN ENGLISH JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN ADVERTISING AND PUBLIC RELATIONS
- POST GRADUATION DIPLOMA IN HINDI JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN RADIO AND TV JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN DIGITAL MEDIA
- POST GRADUATION DIPLOMA IN ODIA JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN URDU JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN MARATHI JOURNALISM
- POST GRADUATION DIPLOMA IN MALAYALAM JOURNALISM
இந்தியன் இன்பர்மேஷன் சர்வீசஸ் பயிற்சிகள் (COURSES FOR INDIAN INFORMATION SERVICES)
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UNION PUBLIC SERVICE COMMISSION) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் (CIVIL SERVICES EXAMINATION) வெற்றி பெற்ற "இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் அதிகாரிகள் "(குரூப்- ஏ மற்றும் குரூப்- பி) (INDIAN INFORMATION SERVICES-GROUP-A AND GROUP-B) ஆகிய இரண்டு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது.
குறிப்பாக -ஆளுமை வளர்ச்சி (PERSONALITY DEVELOPMENT), திறன் மேம்பாடு (SKILL ENHANCEMENT), மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சிகள் இங்கு சிறப்பாக அளிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் இந்திய தகவல் தொடர்பு முறைகள் ஆகியவற்றை தெளிவாக விளக்கி பயிற்சிகள் வழங்கப்படுவதால், இங்கு பயிற்சி பெற்றவர்கள் மிகச்சிறந்த ஆற்றல் படைத்தவர்களாக திகழ்கிறார்கள்.
குறுகிய கால படிப்புகள் மற்றும் பயிற்சிகள் (SHORT-TERM COURSES AND TRAINING)
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (MINISTRY OF INFORMATION AND BROADCASTING) பணியாளர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய வெவ்வேறு அமைப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த நிறுவனம் குறுகிய கால படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. ஒரு வாரம் முதல் 12 வாரங்கள் வரை பொதுவாக தேவைக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படும். இவைகள் தவிர, ராணுவப் படையில் உள்ள அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள், ஊடகத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் ஆகியோருக்கும் தேவைக்குஏற்ப இங்கு பயிற்சிகள் வழங்குகிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கும் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் தொடங்கியதிலிருந்து இப்போதுவரை சுமார் 700 பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் பலன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஏ (மீடியா பிசினஸ் ஸ்டடிஸ்) (M.A. MEDIA BUSINESS STUDIES)
மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் இன் மீடியா பிசினஸ் ஸ்டடிஸ் (MASTER OF ARTS IN MEDIA BUSINESS STUDIES) என்னும் படிப்பை "எம்.ஏ (மீடியா பிசினஸ் ஸ்டடிஸ்) "M.A (MEDIA BUSINESS STUDIES) என அழைப்பார்கள்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோருக்கு பயன்படும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறையைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? என்பதை இந்த பயிற்சி கற்றுத்தருகிறது.
குறிப்பாக-அறிவை மேம்படுத்துதல், திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், புத்தாக்க சிந்தனைகளை உருவாக்குதல் ஆகியவை பயிற்சிகள்மூலம் இந்த படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. இதன்மூலம் வியூகங்கள் வளர்த்து, சிறந்த முடிவுகளை எடுக்கும் சிறப்பு திறமையை இந்தப் பயிற்சியில் பங்கு பெற்றவர்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும்.
மேலும், உலக அளவிலுள்ள ஊடக நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி அமையும்? அதற்குஏற்ப எவ்வாறு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் முறைகள் எவை? என்பது போன்ற பயிற்சிகளும் முறையாக வழங்கப்படுகிறது.
எம்.ஏ ஸ்டிரடஜிக் கம்யூனிகேஷன் (M.A. SRATEGIC COMMUNICATION)
"ஸ்ட்ராட்டஜி"(STRATEGY) என்பதை தமிழில் "உத்தி" என்றும் "உபாயம்" என்றும் மொழி பெயர்ப்பார்கள். சிலர், இதனை, "வியூகம்" என்றும் குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர், இதனை "செயல் நிலைச் சாமர்த்தியம்" என்றும் "செயல்முறை தந்திரம்" என்றும் சொல்வார்கள். ஸ்டேட்டர்ஜிக் கம்யூனிகேஷன் (STRATEGIC COMMUNICATION) என்பது "வியூகத்துடன் கூடிய தகவல் தொடர்பு" ஆகும்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் பல்வேறு தகவல் தொடர்பு வியூகங்களை இந்த படிப்பு கற்றுத் தருகிறது. அதாவது, உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த தகவல் தொடர்பு மற்றும் அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் தகவல் தொடர்பு முறைகள் தவிர வேறு சில பிரபல அமைப்புகளிலும் பயன்படுத்தப்படும் வியூக தகவல் தொடர்பு நுணுக்கங்களையும் "எம்.ஏ., ஸ்டேடர்ஜி கம்யூனிகேஷன் படிப்பு" (M.A., Strategy Communication Course) கற்றுத்தருகிறது.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கும், சில குறிப்பிட்ட செய்திகளை உலகம் முழுவதும் பரப்புவதற்கும், திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட கருத்தை மக்கள் மனதில் உலகம் முழுவதும் உருவாக்குவதற்கும், என்னென்ன வியூகங்கள் பயன்படுத்தப்படுகிறது? என்பதை பயிற்சிகள்மூலம் இங்கே கற்றுத் தரப்படுகிறது. இதனால், இதனை "திட்டமிடப்பட்ட தகவல் தொடர்பு செயல்முறை" என்றே அழைக்கிறார்கள்.
இந்தப்படிப்பை படிப்பதன்மூலம் உலக அளவில் நிறுவனங்களின் 'பிராண்ட்' மற்றும் 'சிறப்பு பெயரை' பிரபலப்படுத்த இயலும். புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கவும், சமூக பொறுப்புணர்வோடு செயல்படவும், உலகளாவிய கலாச்சாரங்களை தெரிந்துகொண்டு, நிறுவனங்களின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தவும், உலக அளவில் ஏற்படும் காலநிலை மாற்றத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்க்கவும் இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பிற்கும், அரசியல் செயல்பாட்டிற்கும், நாகரிக மாற்றங்களை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் முறைகளை கற்றுத்தரவும் போதிய பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது.
எம்.ஏ. (நியூ மீடியா கம்யூனிகேஷன்) (M.A. NEW MEDIA COMMUNICATION)
புதிதாக, வேகமாக வளர்ந்துவரும் "டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்" (DEGITAL TECHNOLOGIES) பற்றி அறிந்து கொள்ளவும், அதன்மூலம் ஆராய்ச்சி, சிந்தனை மாற்றங்கள், சந்தைப்படுத்துதல், நுகரும் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும், இந்த எம்.ஏ.(நியூ மீடியா கம்யூனிகேஷன் (M.A. NEW MEDIA COMMUNICATION) என்னும் படிப்பு மிகவும் உதவியாக அமைகிறது.
சோசியல் மீடியா (SOCIAL MEDIA), மொபைல் பிளாட்பார்ம்ஸ் (MOBILE PLATFORMS), இம்மர்சிவ் கன்டென்ட் (IMMERSIVE CONTENT), ரியல் டைம் இன்டராக்சன்ஸ் (REAL-TIME INTERACTIONS) போன்ற துறைகளில் பயிற்சிகளும், அவற்றை திறம்பட கையாள தேவையான நுணுக்கங்களும் இந்த படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
ஜர்னலிசம் (JOURNALISM), பப்ளிக் ரிலேஷன்ஸ் (PUBLIC RELATIONS), அட்வெர்டைசிங் (ADVERTISING), என்டர்டைன்மென்ட் (ENTERTAINMENT), மற்றும் சிவிக் எங்கேஜ்மென்ட் ஆகிய துறைகளில் சிறப்பு பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது.
"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்" என்பது தகவல் தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அமைக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் ஆகும். இதன் மண்டல அலுவலகங்கள் ஐஸ்வால் (AIZAWL), அமராவதி (AMARAVATHI), டெங்கனால் (DHENKANAL), ஜம்மு (JAMMU), கோட்டயம் (KOTTAYAM) ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
THE INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION
JNU New Campus,
Aruna Asaf Ali Marg,
New Delhi - 110067, INDIA.
Email: iimc.gov.in
