சட்டம் படிக்க விருப்பமா..? எக்கச்சக்க படிப்புகளும்... அவற்றின் விவரங்களும்


சட்டம் படிக்க விருப்பமா..? எக்கச்சக்க படிப்புகளும்... அவற்றின் விவரங்களும்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Nov 2025 11:01 AM IST (Updated: 24 Nov 2025 11:19 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, அரசு சட்டக் கல்லூரிகளும் தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்குகின்றன.

சென்னை

"சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு" என்றார் பேரறிஞர் அண்ணா. மக்கள் அனைவரும், தாங்கள் வாழுகின்ற நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நெறிகளை பின்பற்றி நேர்மையான வாழ்க்கையை வாழ இயலும்.

"இந்தச் சட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று சொல்லிக்கொண்டு யாரும் தப்பிக்க முடியாது. சட்டத்தை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளாதவர்கள், சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் துணையோடு சட்ட திட்டங்களை பின்பற்றி தங்களது தொழில், வணிகம் மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ளலாம்

தமிழ்நாட்டில் சட்டம் படிக்க விரும்புபவர்கள், கண்டிப்பாக சட்டக் கல்வி பற்றிய அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தோடு இணைந்து பல கல்லூரிகள் சட்டக் கல்வியை மாணவ மாணவிகளுக்கு கற்பித்து வருகின்றன.

1. ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் இன் லா (SCHOOL OF EXCELLENCE IN LAW).

“ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் இன் லா” என்னும் சட்டக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இந்த கல்லூரி சென்னையில் தரமணி ரெயில்வே நிலையத்திற்கு அருகில் பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதனை “5 இயர்ஸ் இன்டெகரேட் ஹானஸ் லா டிகிரி கோர்ஸ்” (5 YEARS INTEGRATED HONOURS LAW DEGREE COURSE) என அழைப்பார்கள். ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் இந்த சட்டப் படிப்பில் கீழ்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

1. பி.ஏ, எல்.எல்.பி (ஹானர்ஸ்) டிகிரி கோர்ஸ். ( B.A.LL.B.(HONS.) DEGREE COURSE)

2. பி.பி.ஏ, எல்.எல்.பி (ஹானர்ஸ்) டிகிரி கோர்ஸ் ( B.B.A.LL.B.(HONS.) DEGREE COURSE)

3. பி.காம், எல்.எல்.பி (ஹானர்ஸ்) டிகிரி கோர்ஸ். ( B.Com.LL.B.(HONS.) DEGREE COURSE)

4. பி.சி.ஏ, எல்.எல்.பி ( ஹானர்ஸ்) டிகிரி கோர்ஸ் (B.C.A.LL.B.(HONS.) DEGREE COURSE )

பொதுவாக, மேலே குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளில், சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று வருட டிப்ளமோ (DIPLOMA) படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது மூன்று வருட பாலிடெக்னிக் படிப்பில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இருப்பினும், பி.காம், எல். எல்.பி (ஹானர்ஸ்) ( B.Com.LL.B.(HONS.) DEGREE COURSE) படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக வணிகவியல் (COMMERCE) அல்லது வணிகவியல் தொடர்பான பாடங்களை பிளஸ் 2 தேர்வில் படித்திருக்க வேண்டியது அவசியமாகும். இதேபோல், பி.சி.ஏ, எல்.எல்.பி (ஹானல்ஸ்) கோர்ஸ் ( B.C.A.LL.B.(HONS.) DEGREE COURSE) படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் (COMPUTER SCIENCE) அல்லது அதற்கு இணையான கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்புடைய பாடங்களை பிளஸ் 2 தேர்வில் தேர்ந்தெடுத்து படித்து, வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

5) எல்.எல்.எம் டிகிரி கோர்சஸ் (L.L.M. DEGREE COURSES (UNDER CBCS))

எல்.எல்.எம் டிகிரி கோர்சஸ் கீழ்கண்ட 12 பாடப்பிரிவுகளில் உள்ளது.

(I) BUSINESS LAW

(II) CONSTITUTIONAL LAW AND LEGAL ORDER

(III) INTELLECTUAL PROPERTY LAW

(IV) INTERNATIONAL LAW AND ORGANIZATION

(V) ENVIRONMENTAL LAW

(VI) CRIMINAL LAW AND CRIMINAL JUSTICE ADMINISTRATION

(VII) HUMAN RIGHTS AND DUTIES EDUCATION

(VIII) LABOUR LAW & ADMINISTRATIVE LAW

(IX) TAXATION LAW

(X) CYBER SPACE – LAW AND JUSTICE

(XI) MARITIME LAW

(XII) PROPERTY LAW

(XIII) CRIME AND FORENSIC LAW

6) ஆராய்ச்சி படிப்பு ( RESEARCH DEGREE)

(I) Ph.D DEGREE IN LAW (FULL TIME / PART TIME)

(II) Ph.D DEGREE (INTERDISCIPLINARY) (FULL TIME / PART TIME)

ஆராய்ச்சி படிப்பு முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த Ph.D படிப்பு இன்டர் டிசிப்ளினரி (INTERDISCIPLINARY) முறையிலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவையான மதிப்பெண்கள்:

இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள், கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பு பற்றிய மேலும் விவரங்களை www.tndralu.ac.in என்னும் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, 044-24641919 / 24957414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

2. அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் ( GOVERNMENT LAW COLLEGES AND PRIVATE LAW COLLEGES).

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து, அரசு சட்டக் கல்லூரிகளும் தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்குகின்றன. இந்த கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ, எல்.எல்.பி ( B.A, LL.B. Degree Course ) பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது மூன்று வருட பாலிடெக்னிக் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்த படிப்பில் சேர , பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

தமிழக அரசு சட்டக்கல்லூரிகள்:

தமிழக அரசு சார்பிலும் சில சட்டக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. அந்தக் கல்லூரிகள் பற்றிய விவரம் வருமாறு:

1. CHENNAI Dr. AMBEDKAR GOVERNMENT LAW COLLEGE, PUDUPAKKAM– 603 103

2. CHENNAI Dr. AMBEDKAR GOVERNMENT LAW COLLEGE, PATTARAIPERUMPUDUR – 631203

3. GOVERNMENT LAW COLLEGE, MADURAI – 625 020

4. GOVERNMENT LAW COLLEGE, TIRUCHIRAPALLI – 620 023

5. GOVERNMENT LAW COLLEGE, COIMBATORE – 641 046

6. GOVERNMENT LAW COLLEGE, TIRUNELVELI – 627 011

7. GOVERNMENT LAW COLLEGE, CHENGALPATTU – 603 001

8. GOVERNMENT LAW COLLEGE, VELLORE – 623 006

9. GOVERNMENT LAW COLLEGE, VILLUPURAM – 605 602

10. GOVERNMENT LAW COLLEGE, DHARMAPURI – 636 701

11. GOVERNMENT LAW COLLEGE, RAMANATHAPURAM – 623 501

12. GOVERNMENT LAW COLLEGE, SALEM – 636 010

13. GOVERNMENT LAW COLLEGE, NAMAKKAL – 637 001

14. GOVERNMENT LAW COLLEGE, THENI – 625 534

15. GOVERNMENT LAW COLLEGE, KARAIKUDI – 630003

சுயநிதி சட்டக் கல்லூரிகள்:

தனியார்கள் நடத்தும் சுயநிதி சட்டக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. அவை பற்றி விவரம்:

1. SARASWATHY LAW COLLEGE, TINDIVANAM – 604 307

2. MOTHER TERASA LAW COLLEGE, PUDUKOTTAI – 622 102

3. GTN LAW COLLEGE, DINDUGUL – 624 005

4. KMC COLLEGE OF LAW, TIRUPPUR – 641 605

5. ERODE COLLEGE OF LAW, ERODE – 638 052

6. S THANGAPAZHAM LAW COLLEGE, TENKASI – 627 758

7. THULASI COLLEGE OF LAW FOR WOMEN, TUTRICORIN – 628 252

8. MUGIL COLLEGE OF LAW, KANYAKUMARI – 629 163

9. SKP LAW COLLEGE, THIRUVANNAMALAI – 606 611

10. SIR ISSAC NEWTON LAW COLLEGE, NAGAPATTINAM – 611 102

11. ANANDAM LAW COLLEGE, TANJAVUR – 613 402

மேலும் விவரங்களுக்கு:

THE TAMIL NADU DR.AMBEDKAR LAW UNIVERSITY

“POOMPOZHIL”,

5, DR. D.G.S. DHINAKARAN SALAI,

CHENNAI – 600 028

TELEPHONE NOS. 044-24641919 / 24957414

E-MAIL - thechairmanlawadmissions@gmail.com.


1 More update

Next Story