கிராம உதவியாளர் வேலை: 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு


கிராம உதவியாளர் வேலை: 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
x

கோப்பு படம்

தினத்தந்தி 7 July 2025 2:23 PM IST (Updated: 7 July 2025 2:27 PM IST)
t-max-icont-min-icon

இந்த வேலைக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

காலிப்பணியிடங்கள்: 2,299

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு பாஸ் அல்லது பெயில்

வயது வரம்பு: 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.11,100- 35,100-வரை

தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.8.2025

தேர்வு நடைபெறும் நாள்: 05.9.2025

பிற நிபந்தனைகள்: விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். எந்த கிராமத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

தேர்வு அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்திற்குரியது-https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/07/2025070723-1.pdf

1 More update

Next Story