குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்கள்: 04/2025, நாள் 01.04.2025 மற்றும் 05/2025, நாள் 01.04.2025 வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-1 பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஏ (குரூப்-1ஏ பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற்றது. இத்தேர்விற்கான முதன்மை எழுத்துத் தேர்வு முறையே 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 வரை முற்பகல் சென்னை மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.inpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






