பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியானது

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை
டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 16- ஆங்கிலம்
டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு
டிசம்பர் 18 கணிதம்
டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு
டிசம்பர் 22- அறிவியல்
டிசம்பர் 23- சமூக அறிவியல்
10-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10- தமிழ்மொழி
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம்
டிசம்பர் 18- அறிவியல்
டிசம்பர் 22- சமூக அறிவியல்
டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு
11ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10- தமிழ்
டிசம்பர் 12 ஆங்கிலம்
டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்
டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்
டிசம்பர் 22- கணினி அறிவியல்
டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்
12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்
டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு
டிசம்பர் 23- கணினி அறிவியல்"










