எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு... 25,487 பணியிடங்கள்- அருமையான வாய்ப்பு


எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு... 25,487 பணியிடங்கள்- அருமையான வாய்ப்பு
x

மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

புதுடெல்லி,

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி நிரப்பி வருகிறது. தேர்வர்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த அறிவிப்பு ஒன்றை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்: கான்ஸ்டபிள் (GD) - 25,487

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.01.2026- தேதிப்படி 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 2003 க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம்: மாதம் ரூ.21,700/-முதல் ரூ. 69,100/ வரை கிடைக்கும்.

தேர்வு முறை; பொறுத்தவரை உடல் தகுதி தேர்வு / உடல் திறன் தேர்வு/ மருத்துவ பரிசோதனை/சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வரும் 31.12.2025 கடைசி நாளாகும்

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_01122025.pdf

1 More update

Next Story