பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை: 750 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை: 750 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
x

தமிழகத்தில் மட்டும் 85 காலியிடங்கள் உள்ளன.

நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்; லோக்கல் பேங்க் ஆபிசர்: 750 (மொத்த பணியிடங்கள்), தமிழகத்தில் மட்டும் 85 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அது போக ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934 இன் இரண்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் கிளார்க்/அலுவலர் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியானவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பதவிக்கு மாதம் ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தேர்வு செயல்முறையானது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில்/கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.

ST/SC/முன்னாள் ராணுவத்தினர்/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.59/-. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1180/-. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://pnb.bank.in/) ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23 ஆம் தேதி கடைசி நாளாகும்.

1 More update

Next Story