பொதுத்துறை வங்கியில் வேலை: தமிழகத்தில் மட்டும் 60 காலி பணியிடங்கள்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கும் பேங்க் ஆப் பரோடாவில் மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை,
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருப்பது பேங்க் ஆப் பரோடா. நாடு முழுவதும் வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் விவரம் : உள்ளூர் அதிகாரி- 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் தமிழ்நாடு - 60, கேரளா - 50, கர்நாடகா - 450, மகாராஷ்டிரா - 485, குஜராத் - 1,160 , ஒடிசா - 60 என 18 மாநிலங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி : கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம்,
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் : ரூ. 48,480 - 85,920/-
விண்ணப்ப கட்டணம் : ரூ.ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.07.2025
விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு தொடர்பான முழு விவரங்களை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
தேர்வு அறிவிப்பினை பார்க்க :
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-07/Advertisement-30-31.pdf