எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அரசு தேர்வுத் துறை தயாரிக்க இருக்கிறது. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு ('எமிஸ்') தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும், அதில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்ளவும், விவரங்களை பின்னர் பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.






