ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: 365 பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க

ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள 365 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவுக் காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 365 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 15,900 – 58,500
வயது வரம்பு: அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 - 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரையும் இருக்கலாம்.
ஊரக வளர்ச்சி துறையின் www.tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில், இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைசி நாளாகும்.