உளவுத்துறையில் வேலை: சென்னையிலும் பணியிடம்- பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்

மொத்தம் 4,987 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பின்வருமாறு:
பணியிடங்கள் விவரம்: பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) மொத்தம் 4,987 பணியிடங்கள்
சென்னையில் மட்டும் 285 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை தெரிந்து இருப்பது அவசியம்
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100 வரை
வயது வரம்பு: 18- வயது முதல் 27-க்குள் இருக்க வேண்டும். 17.8.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2025
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html