10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை


10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
x

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சி.எஸ்.எல்)

பணியின் தன்மை: ஒப்பந்த அடிப்படை (5 ஆண்டுகள்)

காலி இடங்கள்: 70

பணி இடம்: கொச்சி

பதவி: ஸ்காபோல்டர், செமி ஸ்கில்டு ரிகர் உள்ளிட்ட பதவிகள்

கல்வி தகுதி: ஸ்காபோல்டர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த பயிற்சி அனுபவம் (2 ஆண்டுகள்) கொண்டவராக இருக்க வேண்டும். செமி ஸ்கில்டு ரிகர் பணிக்கு 4-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த பயிற்சி அனுபவம் ( 2 ஆண்டுகள்) பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28-3-2025 அன்றைய தேதிப்படி 45 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: செய்முறை தேர்வு, உடல் பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-3-2025

இணையதள முகவரி: https://cochinshipyard.in


Next Story