சென்னை ஐஐடியில் வேலை: 23 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை ஐஐடியில் நூலகர் உள்பட 23 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி மெட்ராஸில் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம் : ஐ.ஐ.டி. மெட்ராஸ்
காலி பணி இடங்கள் : 23
பதவி : நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, துணை பதிவாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பதவிகள்
பணி இடம் : சென்னை
கல்வி தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும். அது சார்ந்த பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு நடைபெறும் இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/மாற்றுத்திரனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-5-2025
இணையதள முகவரி : https://recruit.iitm.ac.in/