மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொச்சி,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்த நிறுவனம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு;
பணி நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சி.எஸ்.எல்)
காலி இடங்கள்: 132
பதவி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டோர் கீப்பர், உதவியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் சீனியர் ஷிப் டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்கள்
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி., இளங்கலை பட்டப்படிப்பு, மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 12-1-2026 அன்றைய தேதிப்படி 35 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-1-2026
இணையதள முகவரி: https://cochinshipyard.in/Careers






