மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வேலை..  8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : 19

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

பதவி: உதவி பொறியாளர்

சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை-காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: கட்டட பொறியியலில் பொறியியல் இளநிலைப் பட்டம் (அ) பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் (இந்திய நிறுவனம்) பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கட்டட பொறியியலை ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும்.

பதவி: இளநிலை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை-காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: காவலர்

இந்த பதவிக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

பதவி: உதவி பரிச்சாராகர்

இந்த பதவிக்கு தமிழில் படிக்க எழுத தெரிந்திருப்பது அவசியம் மற்றும் கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மொத்தம் 9 வகையான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.12.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/177/document_1.pdf

1 More update

Next Story