சுகாதார ஆய்வாளர் பணி: 1,429 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த காலிப்பணியிடங்களுக்கு வருகிற 16ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)
காலி பணி இடங்கள்: 1,429
பதவி: சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2)
கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து பிளஸ்-டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்/ சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி வயது வரம்பு எதுவும் கிடையாது.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-11-2025
இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html
Related Tags :
Next Story






