போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் கிடையாது.
சென்னை,
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் கிடையாது.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-25954905, 28510537 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.