கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம் வழங்கும் படிப்புகளும் அவற்றின் விவரங்களும்...

1957 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் "நேஷனல் சுகர் இன்ஸ்டியூட்" என பெயர் மாற்றம் பெற்றது.
கான்பூர்,
இந்தியாவில் மிக பழமை வாய்ந்த சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம் "தேசிய சர்க்கரை நிறுவனம்" எனப்படும்"நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் "ஆகும்.
1920 ஆம் ஆண்டு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியை பெருக்க பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்பின்னர், தொடர்ச்சியாக சர்க்கரை தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
“இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி” என்னும் நிறுவனம் 1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, 1947 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் "இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி"என்னும் பெயர் மாற்றப்பட்டு, "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சுகர் டெக்னாலஜி" (IIST) என்று அழைக்கப்பட்டது.
பின்னர் 1957 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் "நேஷனல் சுகர் இன்ஸ்டியூட்" என பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவில் கான்பூர் என்னும் இடத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. சர்க்கரை தொழில்நுட்பம் மற்றும் சர்க்கரை உற்பத்தி தொடர்புடைய பல்வேறு படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இங்கு பல்வேறு விதமான சர்க்கரை ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நிறுவனம் நடத்தும் படிப்புகள்:
நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் என்னும் இந்த நிறுவனம் நடத்தும் பல்வேறு படிப்புகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
1.பெல்லோஷிப் டிப்ளமோ இன் சுகர் டெக்னாலஜி (FELLOWSHIP DIPLOMA IN SUGAR TECHNOLOGY) அல்லது (சுகர் கெமிஸ்ட்ரி) (SUGAR CHEMISTRY).
இது ஓராண்டு டிப்ளமோ படிப்பாகும். இந்த படிப்பில் சர்க்கரை தொழிற்சாலைக்கு நேரில் சென்று பயிற்சி பெறலாம். அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.
பி.எஸ்சி. பட்டப்படிப்பில் அறிவியல், இயற்பியல் மற்றும் கணிதம் பாடம் படித்தவர்கள், இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பி.இ கெமிக்கல் இன்ஜினியரிங் (CHEMICAL ENGINEERING) படிப்பை முடித்தவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
மேலும், பி.எஸ்சி. சுகர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி படித்தவர்களுக்கும், புட் டெக்னாலஜி (FOOD TECHNOLOGY) படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் இந்த படிப்பில் சேர வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு சர்க்கரை தொழிற்சாலை அல்லது அதோடு தொடர்புடைய தொழிற்சாலைகளில் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.
2. பெல்லோஷிப் டிப்ளமோ இன் சுகர் இன்ஜினியரிங் (FELLOWSHIP DIPLOMA IN SUGAR ENGINEERING).
இந்த படிப்பும் ஓராண்டு டிப்ளமோ படிப்பாகும். சர்க்கரை தொழிற்சாலைக்கு நேரில் சென்று சிறப்பு பயிற்சி பெறும் வகையில் பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.
பி.இ. பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் (MECHANICAL) ப்ரொடக்ஷன் (PRODUCTION), எலக்ட்ரிக்கல் (ELECTRICAL), எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (ELECTRICAL AND ELECTRONICS), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் (ELECTRONICS AND INSTRUMENTATION), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (ELECTRONICS AND COMMUNICATION), இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல் (INSTRUMENTATION AND CONTROL) ஆகிய ஏதேனும் பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு இந்த படிப்பில் சேர வாய்ப்புகள் வழங்கப்படும்.
மேலும், ஏ. எம். ஐ .இ. (A.M.I.E) படித்தவர்களும் இந்த படிப்பில் சேரலாம். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு, சர்க்கரை தொழிற்சாலை மற்றும் அது தொடர்புடைய தொழிற்சாலைகளில் பொறியாளர், உதவி பொறியாளர், மற்றும் உதவி மேலாளர் பணிகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
3. பெல்லோஷிப் இன் பெர்மேன்டேஷன் டெக்னாலஜி (FELLOWSHIP IN FERMENTATION TECHNOLOGY).
இந்த படிப்பு ஓராண்டு படிப்பாகும். நொதித்தல் அல்லது புளிப்பேற்றுதல் ஆகியவற்றை பற்றிய படிப்பு இது. கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றும் செயல்முறை பற்றிய விளக்கங்கள் வழங்கும் படிப்பு இது ஆகும். அதாவது, ஆல்கஹால் அல்லது லாக்டிக் அமிலம் தயாரிப்பு முறைகளை இந்த படிப்பு கற்று தருகிறது.
பி.எஸ்சி. பட்டப்படிப்பில் வேதியியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது பயோ கெமிஸ்ட்ரி ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது பயோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கும் சர்க்கரை ஆலை மற்றும் அதன் தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
4. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ கோர்ஸ் இன் சுகர் டெக்னாலஜி.
(POST GRADUATE DIPLOMA IN SUGAR TECHNOLOGY).
இந்த படிப்பு இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும்.
5. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ கோர்ஸ் இன் சுகர் இன்ஜினியரிங் ( POST GRADUATE DIPLOMA IN SUGAR ENGINEERING).
இந்த படிப்பு ஒன்றரை ஆண்டு படிப்பாகும்.
6. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ கோர்ஸ் இன் இண்டஸ்ட்ரியல் பெர்மண்டேஷன் அண்ட் ஆல்கஹால் டெக்னாலஜி (POST GRADUATE DIPLOMA COURSE IN INDUSTRIAL FERMENTATION AND ALCOHOL TECHNOLOGY).
இந்த படிப்பு ஒன்றரை வருடங்கள் நடத்தப்படும் படிப்பாகும்.
7. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ கோர்ஸ் இன் சுகர்கேன் ப்ரொடக்டிவிட்டி அண்ட் மெச்சூரிட்டி மேனேஜ்மென்ட் ( POST GRADUATE DIPLOMA COURSE IN SUGARCANE PRODUCTIVITY AND MATURITY MANAGEMENT).
இந்த படிப்பு ஓராண்டு நடத்தப்படும் படிப்பாகும்.
பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்பை முடித்தவர்களுக்கு CANE DEVELOPMENT OFFICER, CANE OFFICER, CANE SUPERVISOR போன்ற பதவிகள் சர்க்கரை ஆலை மற்றும் அதன் தொடர்புடைய தொழிற்சாலைகளில் வழங்கப்படும்.
8. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் குவாலிட்டி கண்ட்ரோல் அண்ட் என்விரான்மென்டல் சயின்ஸ் (POST GRADUATE DIPLOMA IN QUALITY CONTROL AND ENVIRONMENTAL SCIENCE).
இந்த படிப்பு ஓராண்டு படிப்பாகும்.
பி.எஸ்சி. பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படித்தவர்களும், உயிரியியல், தாவரவியல் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
பி.எஸ்சி. பயோ டெக்னாலஜி மற்றும் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்து முடித்தவர்களும் இந்த டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு என்விரோன்மென்டல் கெமிஸ்ட், குவாலிட்டி கண்ட்ரோல் கெமிஸ்ட் போன்ற பதவிகள் சர்க்கரை ஆலைகள் மற்றும் டிஸ்டிலரீஸ் போன்றவற்றில் வழங்கப்படுகின்றன.
சான்றிதழ் படிப்புகள் (CERTIFICATE COURSES)
1. சர்டிபிகேட் கோர்ஸ் இன் சுகர் பாயிலிங் (CERTIFICATE COURSE IN SUGAR BOILING).
இது ஓராண்டு படிப்பாகும். எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ் 2 படிப்பில் அறிவியல் அல்லது வேளாண்மை இயல் ஆகிய பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு PAN MAN, HEAD PAN MAN, LABORATORY CHEMIST போன்ற பதவிகள் சர்க்கரை ஆலைகளில் வழங்கப்படுகின்றன.
2. சர்டிபிகேட் கோர்ஸ் இன் குவாலிட்டி கண்ட்ரோல் (CERTIFICATE COURSE IN QUALITY CONTROL)
இந்த படிப்பு நான்கு மாத படிப்பாகும். பிளஸ் டூ படிப்பில் அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு லேபரட்டரி கெமிஸ்ட், குவாலிட்டி கண்ட்ரோல் கெமிஸ்ட், லேபரட்டரி இன் சார்ஜ் போன்ற பதவிகள் சர்க்கரை ஆலைகளில் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு…
DIRECTOR,
NATIONAL SUGAR INSTITUTE,
KALYANPUR
KANPUR- 208017
E-Mail: nsikanpur@nic.in, nsikanpureducation@gmail.com
இவை தவிர https://nsi.gov.in இணையதளத்தில் இந்த படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.






