இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வழங்கும் படிப்புகள்...!


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வழங்கும் படிப்புகள்...!
x

தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப இயங்கும் தன்மையை இந்த நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.

உலகத் தரம் வாய்ந்த மேலாண்மை படிப்புகளை சிறந்த முறையில் கற்றுத் தரும் நிறுவனம் "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்" (INDIAN INSTITUTES OF MANAGEMENT)(IIM)ஆகும். இந்த நிறுவனம் வணிக , தொழில் ,மேலாண்மை கல்வியை மிகச் சிறந்த பயிற்சிகள் மூலம் கற்றுத் தருகிறது.

குறிப்பாக தலைமை பண்புகள், மேலாண்மை திறன்கள், வியூகம் வளர்க்கும் சிந்தனைகள் ஆகியவற்றை மாணவ- மாணவிகள் மேம்படுத்தும் விதத்தில் அனுபவ பயிற்சிகளை வழங்குகிறது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு உற்சாகத்தோடு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப இயங்கும் தன்மையையும் இந்த நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.

நிதி, கணக்கியல், மனிதவள மேலாண்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை பல்வேறு பயிற்சிகள் மூலம் மாணவ -மாணவிகள் எளிதில் கற்றுக் கொள்ள வழி செய்கிறது.

தொழில் நிறுவனங்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டு, தரம் வாய்ந்த பயிற்சிகளை தொழில் நிறுவனங்கள் வழங்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாய பொறுப்புணர்வோடு, நெறிமுறைகளை பின்பற்றி நிர்வாகம் செய்யும் நுணுக்கங்களையும் இந்த நிறுவனம் சிறந்த முறையில் கற்றுத் தருகிறது.

இங்கு படித்த மாணவ, மாணவிகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய மரியாதை கிடைப்பதால், இந்த இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் என்னும் நிறுவனங்களில் பலரும் விரும்பிச் சேருகிறார்கள்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (INDIAN INSTITUTES OF MANAGEMENT) என்னும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பல இடங்களில் இயங்கி வருகின்றன.

குறிப்பாக அகமதாபாத் (AHMEDABAD),, அமித்சர் (AMRITSAR), பெங்களூர் (BANGALORE), போத் கயா (BODH GAYA) கல்கத்தா (CALCUTTA,), ராய்ப்பூர் (RAIPUR), இந்தூர் (INDORE), ஜம்மு (JAMMU) , காசிப்பூர் (KASHIPUR), கோழிக்கோடு (KOZHIKODE), லக்னோ (LUCKNOW), மும்பை (MUMBAI), நாக்பூர் (NAGPUR) , ராஞ்சி (RANCHI), ரோக்டாக் (ROHTAK),, சாம்பல்பூர் (SAMBALPUR), ஹில்லாங் (SHILLONG),, சிராமோர் (SIRMAUR), திருச்சிராப்பள்ளி (TIRUCHIRAPPALLI), உதய்ப்பூர்( UDAIPUR), மற்றும் விசாகப்பட்டினம் (VISAKHAPATNAM),-ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட்) COMMON ADMISSION TEST (CAT)

இந்தக் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவு தேர்வின் பெயர் காமன் அட்மிஷன் டெஸ்ட் (COMMON ADMISSION TEST) ஆகும்.

இதனை கேட் (CAT) என்றும் அழைப்பார்கள். இந்த நுழைவு தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி www.iimcat.ac.in ஆகும்.

விதவிதமாய் படிப்புகள்.

இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்புகள்.

இந்த நிறுவனங்களில் நடத்தப்படும் பட்ட மேற்படிப்புகள் சம்பந்தப்பட்ட விவரங்கள்;

1.போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் (பி ஜி பி) (POST GRADUATE PROGRAM IN MANAGEMENT) (PGP)

இந்தப் படிப்பை மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம் பி ஏ) படிப்புக்கு இணையாக கருதுவார்கள். இந்தப் படிப்பில் சேர கேட் எனப்படும் நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

2. பிஜிபி இன் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் (பிஜி,பி,பி.எம்) (PGP IN BUSINESS MANAGEMENT) (PGPBM)

இந்தப் படிப்பும் எம்பிஏ படிப்புக்கு இணையான படிப்பு என கருதுவார்கள். இந்த படிப்பில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு படிக்கலாம். இந்தப் படிப்பு பகுதி நேரமாகவும் நடத்தப்படுகிறது. வார இறுதி நாட்களிலும் இந்த படிப்பு நடத்தப்படும்.

3. பிஜி. பி இ எக்ஸ் / இ. பி. ஜி. பி . PGPEX / EPGP

இந்தப் படிப்பு எக்ஸிக்யூட்டிவ் எம்.பி.ஏ என்னும் சிறப்பு அந்தஸ்தை தரும் படிப்பாகும். இது ஓராண்டு முழு நர படிப்பாகும். இந்த படிப்பில் தொழில் மாற்றும் வணிக நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

ஆராய்ச்சிப் படிப்புகள்.

1. பிஎச்.டி இன் மேனேஜ்மென்ட். (Ph.D IN MANAGEMENT)

முன்பு, ல்லோ ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் FELLOW PROGRAM IN MANAGEMENT (FPM) என அழைக்கப்பட்ட இந்த ஆய்வுப் படிப்பு தற்போது பிஎச்டி இன் மேனேஜ்மென்ட் (Ph.D IN MANAGEMENT) என அழைக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி படிப்பில் நிதி, சந்தைவியல், ஆர்கனைசேஷனல் பிஹேவியர் போன்ற பல துறைகளில் ஆய்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது.

சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை இந்த ஆய்வு படிப்பை படிக்கலாம்.

கல்வித் தகுதி

பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றவர்கள் இந்த நுழைவு தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த தேர்வு எழுதலாம். ஆனால், குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் சி .ஏ (CA), சி.எஸ் (CS) ,சி. டபுள்யூ. ஏ (CWA) ,எஃப்.சி ஏ.ஐ (FCAI ) , போன்ற சிறப்பு படிப்புகளை முடித்தவர்களுக்கும் இந்த தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு

"காமன் அட்மிஷன் டெஸ்ட்" என்னும் இந்த நுழைவு தேர்வை எந்த வயதிலும் எழுதலாம். பணி அனுபவம் உள்ளவர்களும் (WORK EXPERIENCE), பணி அனுபவம் இல்லாதவர்களும் கூட இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

பட்டப் படிப்பில் தேவையான மதிப்பெண்கள்.

இந்தத் தேர்வு எழுத, பட்ட படிப்பில் பொது பிரிவினர் மற்றும் ஓ.பி.சி இனத்தை சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் (EWS) ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

இந்திய அளவில் தேர்வு.

இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுவதால் காமன் அட்மிஷன் டெஸ்ட் என்னும் இந்த தேர்வில் 2024 ஆம் ஆண்டு சுமார் 2. 93 லட்சம் போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள்.

தேர்வு கட்டணம்.

"காமன் அட்மிஷன் டெஸ்ட்" என்னும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 2500 ஆகும். பொதுப் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் ரூபாய் 1250 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினால் போதும் .

தேர்வு தேதி

2026 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இப்போதே வெளியிடப்பட்டுள்ளது.

காமன் அட்மிஷன் டெஸ்ட் என்னும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

காமன் அட்மிஷன் டெஸ்ட் தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த (2025) ஜூலை மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை அனுப்பலாம். நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.

தேர்வு முடிவுகள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்.

இந்த தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெறும். சுமார் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் திருச்சிராப்பள்ளி. (INDIAN INSTITUTES OF MANAGEMENT TIRUCHIRAPPALI)

தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்" என்னும் கல்வி நிறுவனம் இயங்குகிறது.

மேலாண்மை கல்வியை உலக தரத்திற்கு வழங்கும் விதத்தில் பல்வேறு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும் தொழில் வணிக நிறுவனங்களில் தலைவர்களாக வர விரும்புபவர்களுக்கும் பல்வேறு அனுபவக் கல்வி இங்கு வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

திருச்சிராப்பள்ளி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என்னும் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள் விவரம் வருமாறு:

1. போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் (பி ஜி பி எம்) (Post Graduate Programme in Management (PGPM) )

2 போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் -- ஹியூமன் ரிசோர்சஸ் (பி.ஜி.பி.எம் - எச் ஆர்) Post-Graduate Programme in Management-Human Resources (PGPM-HR)

3. பி .ஜி . பி.பி எம் (எம். பி. ஏ ஃபார் வொர்கிங் எக்ஸிக்யூட்டிஸ்) PGPBM (MBA for Working Executives)

4. பிஎச் .டி (டாக்டரல் ப்ரோக்ராம்) Ph.D (Doctoral Programme)

5. இ _பி ஹெச் டி (எக்ஸிக்யூட்டிவ் டாக்டரல் ப்ரோக்ராம்) (E. Ph.D (Executive Doctoral Programme)

மேலும் விவரங்களுக்கு..

இந்தப் படிப்புகள் பற்றிய மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

WEBSITE : www.iimtrichy.ac.in

TRICHY CAMPUS

INDIAN INSTITUTE OF MANAGEMENT TIRUCHIRAPPALLI

PUDUKKOTTAI MAIN ROAD,

CHINNA SOORIYUR VILLAGE,

TIRUCHIRAPPALLI – 620 024,

TAMIL NADU, INDIA

Email: info@iimtrichy.ac.in

Phone : +91-431-2505000

CHENNAI CAMPUS

IIM TIRUCHIRAPPALLI- CHENNAI CENTRE

BSNL TELEPHONE EXCHANGE BUILDING (5TH & 6TH FLOOR),

99, JAWAHARLAL NEHRU ROAD,

K. K. NAGAR,

CHENNAI-600 078, TAMIL NADU, INDIA.

Email: pgpbminfo@iimtrichy.ac.in

Phone : +91-4422255565

1 More update

Next Story