சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை இதழியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
24.07.2025 அன்று துவங்கிய சென்னை இதழியல் கல்வி நிறுவனம் அளிக்கும் ஒரு வருட இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் 03.08.2025 அன்று முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 10.08.2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் செயல்படுவதற்கான உயர்தர கல்வியை வழங்கும் வண்ணம் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் முழு விவரத்தை அறியவும், முதுநிலைப் பட்டயப் படிப்பிற்காக விண்ணப்பிக்கவும் https://cij.tn.gov.in// என்ற இணைய தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களும், ஆண்களும் பொறுப்புடன் கூடிய சிறந்த ஊடகவியலாளராக செயல்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பில் அனைவரும் பங்கு பெறும் விதத்தில், இந்த முதுநிலை பட்டயப் படிப்பின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.