சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

2025-26-ம் கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
சென்னை,
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு(2026) பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது.
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக, அவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும். அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
.10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கி, மார்ச் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 17-ந்தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 9-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.பொதுத் தேர்வு அட்டவணையை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story






