சென்னை எம்.டி.சியில் தொழில் பழகுனர் பயிற்சி; அக்டோபர் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை எம்.டி.சியில் தொழில் பழகுனர் பயிற்சி;  அக்டோபர் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x

சரியான தகுதியுடையவர்கள் அக்டோபர் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், பட்டம், பட்டயம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத ஸ்டிரீம் பெற்றவர்கள் 2025-2026-ம் ஆண்டிற்கான தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம்(பி.இ.), பட்டயம் (டிப்ளமோ) மற்றும் தொழில்நுட்பம் அல்லாத ஸ்டிரீம் (இளங்கலை) படிப்புகளில் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் மற்றும் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.எம். உள்ளிட்ட படிப்புகளில் 2021, 2022, 2023, 2024 - 2025-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் https://nats.education.gov.inஎன்ற இணையதளம் மூலம் அக்டோபர் 18-ந் தேதிக்குள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story