பொது சுகாதாரத்துறையில் 38 பணியிடங்கள்: கோவை மாநகராட்சி அறிவிப்பு


பொது சுகாதாரத்துறையில் 38 பணியிடங்கள்: கோவை மாநகராட்சி அறிவிப்பு
x

செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவை,

கோயமுத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாகவுள்ள நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள். நுண்ணுயிரியலாளர், ஆய்வகநுட்புநர் மற்றும் பல்நோக்கு மருத்துவப்பணியாளர், பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக (6 மாத காலத்திற்கு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து தேதியன்று அன்று 30.04.25 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்: நகர சுகாதார செவிலியர்கள்- 25, செவிலியர் பணியாளர்கள் - 02, மருந்தாளுநர்கள் - 02 என மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

பிற விவரங்கள்: இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் இணையும் போது பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் மற்றும் 6 மாத காலத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும். தேவை ஏற்படின் தங்களுடனான ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படும். மேற்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழுமத்தின் மூலம் நிரப்பப்படும்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தங்களுடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாநகரநல அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன்ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடைவீதி, கோயம்புத்தூர் -641001.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf

1 More update

Next Story