கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.
மும்பை,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார். அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு முறையை டொனால்டு டிரம்ப் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரியை அதிகரிப்பது தொடர்பாக டிரம்ப் நாளை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
அந்த வகையில் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 353 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 165 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 390 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 24 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
737 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 827 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 545 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 162 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 383 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 892 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 649 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.