நகை பிரியர்களுக்கு இன்ப செய்தி: குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?


நகை பிரியர்களுக்கு இன்ப செய்தி:  குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
x

24-ம் தேதி பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75,040க்கு விற்பனையானது. அதன் பிறகு மறுநாளில் இருந்தே தங்கம் விலை குறைய தொடங்கியது.

24-ம் தேதி பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் 25-ம் தேதி மேலும் குறைந்து பவுன் ரூ.73,680க்கு விற்பனையானது. 26-ம் தேதி மேலும் குறைந்து பவுன் ரூ.73,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன் பிறகு மேலும் 2 நாட்கள் அதே விலையே நீடித்தது. நேற்று முன் தினம் தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.73,200க்கு விற்கப்பட்டது.

இந்தநிலையில் 6 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று உயர்ந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.73,680க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 480 அதிகரித்தது. நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,150க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.9.210க்கு விற்பனையானது.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து கிராம் ரூ.9,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

31.07.2025 ஒரு சவரன் ரூ.73,360

30.07.2025 ஒரு சவரன் ரூ. 73,680

29.07.2025 ஒரு சவரன் ரூ. 73,200

28.07.2025 ஒரு சவரன் ரூ. 73,280

25.07.2025 ஒரு சவரன் ரூ. 73,680

1 More update

Next Story