சற்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் ?

சென்னையில் இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ. 74 ஆயிரத்து 40க்கு விற்பனை செய்யபட்டது. கிராமிற்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 255க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 45 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 210க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமையும் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி, சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 73 ஆயிரத்து 280க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 50 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி சனிக்கிழமை விலையே நீடித்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை (29.7.2025 - செவ்வாய்கிழமை) சற்று குறைந்து விற்பனை ஆனது அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 73 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 10 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 150க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (20.7.2025 - புதன்கிழமை) சற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ. 1 உயர்ந்து கிராம் ரூ.127க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
30.07.2025 ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 ஒரு சவரன் ரூ. 73,200
28.07.2025 ஒரு சவரன் ரூ. 73,280
26.07.2025 ஒரு சவரன் ரூ. 73,280
25.07.2025 ஒரு சவரன் ரூ. 73,680
24.07.2025 ஒரு சவரன் ரூ.74,040