தொடர்ந்து 3வது நாளாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்?


தொடர்ந்து 3வது நாளாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்?
x

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சென்னை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான நிலை இருக்கிறது.

அதன்படி, கடந்த புதன்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை ரூ. 75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை கடந்தது.

இதனை தொடர்ந்து தங்கம் விலை நேற்று முன் தினம் சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ. 74 ஆயிரத்து 40க்கு விற்பனை செய்யபடது. கிராமிற்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 255க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், தங்கம் விலை நேற்றும் சற்று குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 45 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 210க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 73 ஆயிரத்து 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 50 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

26.07.2025 ஒரு சவரன் ரூ. 73,280 (இன்று)

25.07.2025 ஒரு சவரன் ரூ. 73,680 (நேற்று)

24.07.2025 ஒரு சவரன் ரூ.74,040 (நேற்று முன் தினம்)

23.07.2025 ஒரு சவரன் ரூ.75,040

22.07.2025 ஒரு சவரன் ரூ.74,280

1 More update

Next Story