தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,560 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது. தொடர்ந்து நேற்றும் சவரனுக்கு ரூ.600 குறைந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஒரு லட்சத்து 19 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.