தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.
இந்த சூழலில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது. பின்னர் மீண்டும் எகிறத் தொடங்கியது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.