இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

கோப்புப்படம்
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கும், சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






