ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. கடந்த 8ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்டு வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,305க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் 74,440 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,355க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

26.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,840 (இன்று)

25.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,440 (நேற்று)

24.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520

23.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520

22.08.2025 - ஒரு சவரன் - ரூ.73,720

21.08.2025 - ஒரு சவரன் - ரூ.73,840

1 More update

Next Story