குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை ரூ.440 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 16, 17-ந் தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்றும் நேற்று முந்தினமும் மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையான்து. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 680 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது.