உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?


High gold prices... What is the situation today?
x
தினத்தந்தி 21 Jun 2025 9:40 AM IST (Updated: 21 Jun 2025 9:44 AM IST)
t-max-icont-min-icon

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் வில்லை சற்று குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 680 க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,210 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 880 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ரூ.9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.

1 More update

Next Story