தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640-ஆகவும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.