மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை,
தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 12-ந்தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160 என்ற உச்சத்தையும் தொட்டு, அது வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வாக பார்க்கப்பட்டது. மேலும் விலை அதிகரிக்குமோ? என நினைத்த நேரத்தில் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.120 குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70.520-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.