அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையாகிறது.
சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.68,880க்கு விற்பனை ஆனது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்மூலம் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் இறங்கியது. 3 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000 வரை உயர்ந்த நிலையில் தங்கம் விலை இறங்குமுகம் நோக்கி சென்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.8720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story