மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை,

தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. இதன்படி தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு பவுன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 355-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 390-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி இருந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 405-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

28.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,240 (இன்று)

27.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,120 ((நேற்று)

26.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,840

25.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,440

24.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520

23.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520

1 More update

Next Story