அதிரடியாக குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?


அதிரடியாக குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 17 Jun 2025 9:54 AM IST (Updated: 18 Jun 2025 10:01 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,200க்கு விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

இந்த சூழலில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது. பின்னர் மீண்டும் எகிறத் தொடங்கியது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 840 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ரூ.73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 105 குறைந்து கிராம் ரூ.9,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ. 120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story