அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

3 வாரங்களில் சவரனுக்கு ரூ.5,000க்கும் மேல் குறைந்துள்ளது தங்கம் விலை.
சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்தநிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.68,880க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.195 குறைந்து ரூ.8610க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் இறங்கியது. 3 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000 வரை உயர்ந்த நிலையில் தற்போது தங்கம் விலை இறங்குமுகம் நோக்கி செல்கிறது.