தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?

ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது.
அந்தவகையில் நேற்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் பவுனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கும் கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.