ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

representation image (Meta AI)

தங்கம் விலை ஒரே நாளில் நேற்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ரூ.90 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதன்படி கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.

அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் விலை குறைந்து, ரூ.90 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து ரூ.90 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. மொத்தமாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது.

வெகு நாட்களுக்கு பிறகு, நேற்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்வு ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே இப்படி இருந்த விலை உயர்வினால்தான், தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மீண்டும் தங்கம் விலை ஏற்றப்பாதைக்கு செல்ல தயாராகிவிட்டதா? என பலரையும் நினைக்கத் தோன்ற செய்திருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,270-க்கும், சவரன் ரூ.90,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றிஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160 (இன்று)

06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560 (நேற்று)

05.11.2025 ஒரு சவரன் ரூ.89,440

04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000

03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800

02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

1 More update

Next Story