மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதியில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே பயணிக்கிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதன்படி கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது.
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, நேற்று விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 270-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டு வந்த வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றிஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 (இன்று)
07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160 (நேற்று)
06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560
05.11.2025 ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480






