தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.! - இன்றைய நிலவரம் என்ன?


தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.! - இன்றைய நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 5 Jun 2025 9:51 AM IST (Updated: 5 Jun 2025 9:59 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720-ஆகவும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story