சென்னை: ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?


சென்னை: ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 25 April 2025 9:57 AM IST (Updated: 25 April 2025 11:04 AM IST)
t-max-icont-min-icon

நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 18-ம் தேதி ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 945 எனவும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 560 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின்னர், 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

3 நாட்களுக்கு பின்னர் கடந்த 21-ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு பவுன் ரூ.560 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

22ந்தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,200 உயர்ந்து சவரன் ரூ.74,320க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிரடியாக உயர்ந்தது போல நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று , சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து 9,005-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த இரு தினங்களாக குறைந்த தங்கம் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.72,040-க்கும், ஒரு கிராம் ரூ.9,005-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story