தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?


தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 March 2025 9:58 AM IST (Updated: 20 March 2025 10:06 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ளது.

சென்னை,

பங்குச்சந்தை வீழ்ச்சி, போர் சூழல்களால் பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.


Next Story