ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் என்ன..?


ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 March 2025 9:55 AM IST (Updated: 20 March 2025 10:05 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ளது.

சென்னை,

பங்குச்சந்தை வீழ்ச்சி, போர் சூழல்களால் பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,210-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 18-ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,250-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிவிலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story