மீண்டும் ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


மீண்டும் ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x
தினத்தந்தி 12 July 2025 9:39 AM IST (Updated: 12 July 2025 11:40 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.121-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

12.07.2025 ஒரு சவரன் ரூ. 73,120 (இன்று)

11.07.2025 ஒரு சவரன் ரூ. 72,600 (நேற்று)

10.07.2025 ஒரு சவரன் ரூ. 72,160

09.07.2025 ஒரு சவரன் ரூ. 72,000

08.07.2025 ஒரு சவரன் ரூ. 72,480

07.07.2025 ஒரு சவரன் ரூ. 72,080

1 More update

Next Story